நான் ரொம்ப ஸ்பீட் என்னுடைய 50 வது பதிவிற்க்கு எனக்கு வாழ்த்து
சொல்லும் அன்பு நண்பர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்து
கொள்கிறேன் நீங்க சொல்லும் நன்றியை நான் விரும்பவில்லை அப்பறம்
எதற்கு 50 வது பதிவு என்று தலைப்பு இருக்கு என்று கூட நீங்க யோசிக்கலாம்
(எல்லாம் ஓரு விளம்பரம் தான் ) அதற்கு மட்டும் இல்லை என்னுடைய ப்ளாக்
குறையை சொல்லுங்க அது தான் எனக்கு புடித்து உள்ளது என்னுடைய
பதிவில் நிறைய குறை இருக்கு ஆனால் எனக்கு தெரியவில்லை என்னோட
ப்ளாக்யில் குறை இருந்தால் சொல்லுங்க அது தான் எனக்கு ஆயிரம்
வாழ்த்துக்கள் சொன்னதற்க்கு சமம்
இன்று பதிவு நான் எப்படி பதிவு எழுத ஆரம்பம் செய்தேன் என்னோட சொந்த
வாழ்கை சோக கதை சொல்ல போறேன் மற்றும்
புதிய பதிவர்களுக்கு சில ஆலோசனைகள் சொல்ல போறேன்
என் மனசாட்சி ஸ்பீக்கிங் நானே ஓரு அரைகுறை பாவம் இந்த பயபுள்ளைங்க
விலைமதிக்க முடியாத ஆலோசனைகள் நேரடியாக சொல்ல மாட்டேன்
என்னோட கதை படிங்க அதை வைத்து புரிந்து கொள்ளுங்கள்
(பாவம் சொல்லும் ஆலோசனை புதியவர்களுக்கு எப்படி தெரியும் ஹ்ம்ம்
ஓரு ஐடியா என்னோட ஆலோசனைக்கு மட்டும் ஊதா கலர் எழுத்து )
நான் முதன் முதலில் ப்ளாக் பார்த்தது கண்மணி (பிளாக்கர் டிப்ஸ் தளம் )
பிறகு தான் கடந்த ஓரு வருடத்திற்கு முன்பு தான் ப்ளாக் தொடக்கம்
செய்தேன் ப்ளாக் தொடக்கம் மட்டும் தான் பிறகு ப்ளாக் பக்கமே
போகவில்லை ஓரு பதிவும் போடவில்லை பிறகு மறுபடியும் ஓரு மாதம்
கழித்து பதிவு எழுத ஆரம்பம் செய்தேன் ஆனால் பதிவு எப்படி எழுதுவது என்று
தெரியவில்லை பிறகு தான் (அது தான் எல்லாரையும் போல்
பிரபலமான பதிவர் கூட பெரும்பாலும் முதல் பதிவு கோப்பி பேஸ்ட்
தான் இருக்கும் நான் கோப்பி பேஸ்ட் செய்த முதல் பதிவு ஹோலிகாப்டரில்
ஊர் சுத்தலாம் வாங்க பதிவு பிளாக்கர் நண்பன் தளத்தில் இருந்து கடந்த
ஆறு மாதங்களுக்கு முன்பு )பிறகும் எல்லா தளத்திலும் எனக்கு புடிதத்தை
கோப்பி செய்து என்னோட தளத்தில் பேஸ்ட் செய்து கொள்வேன்
(இந்த தளத்தில் இல்ல எனக்கு மொத்தம் நாலு ப்ளாக் இருக்கிறது
மாதம் மாதம் ஓரு ப்ளாக் தொடங்கி அடுத்த மாதமே அதை நீக்கி விடுவேன் )
நான் இது வரை ஐம்பது ப்ளாக் மேல் தொடங்கி இருக்கிறேன் ஆனால் இன்று
கைவசம் இருப்பது நாலு ப்ளாக் மட்டுமே
கொஞ்சம் கொஞ்சமாக பிளாக்கர் உள்ள வசதிகளை தெரிந்து கொண்டேன்
அதற்கு பெரிதும் உதவியாய் இருந்தது பிளாக்கர் நண்பன் ,வந்தே மாதரம்
கண்மணி (பிளாக்கர் டிப்ஸ் ) நிலவை தேடி ,தங்கம் பழனி ,என்டர் பிளஸ்
அன்பை தேடி ,வைரை சதீஷ் தளங்கள் தான் ,பிறகு தான் கடந்த மே மாதம்
முதல் பதிவு எழுத ஆரம்பம் செய்தேன் முதல் பதிவு நவ்பார் நீக்குவது எப்படி
பதிவு இரண்டு வரியில் தான் எழுதினேன் ஆனால் அதை எழுத நான் பட்டபாடு
இருக்கே அய்யேய்யோ அழுகாத குறை தான் கடந்த சில நாட்கள் முன்பு தான்
அந்த பதிவை பார்த்தேன் எனக்கே புடிக்க வில்லை பிறகு கொஞ்சம்
மாற்றி அமைத்தேன் அது வேற கதை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு
எழுத கற்று கொண்டேன் என்னோட முந்தைய பதிவுகள் பார்த்தல்
உங்களுக்கே புரியும் நிறைய எழுத்து பிழை இருக்கும் இப்பொழுது தான்
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அமைத்து கொண்டு இருக்கிறேன்
இந்த பதிவிலும் எழுத்து பிழை இருக்கலாம் எழுத்து பிழை இருக்கே என்று
பதிவு எழுதுவதை நிறுத்த வில்லை தினமும் பதிவு எழுதி என்னோட எழுத்து
திறமையை வளர்த்து கொண்டு இருகிறேன் எனக்கு இங்கிலீஷ் அவ்வளவாக
வராது இருந்தாலும் முயற்சி செய்து பிளாக்கரில் உள்ள புதிய வசதிகளை
கற்று கொண்டு இருக்கிறேன் இந்த தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும்
என்னுடைய பதிவுகளே
உதாரணமாக பேஸ்புக் கமென்ட் பெட்டி இணைப்பது எப்படி என்று
அனைவரும் பதிவு வெளியீடு செய்யலாம் ஒரே பதிவை கோப்பி அடித்து
பகிர்வது தவறு ஆனால் அதே பதிவை உங்கள் எழுத்து நடையில் பதிவு
எழுதி வெளியீடு செய்யலாம் அதில் தவறு எதுவும் இல்லை
(சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஓரு தொழில் நுட்ப பதிவை கோப்பி
அடிப்பதில் தவறு இல்லை கோப்பி என்றால் ஈ அடிச்சான் கோப்பி கூடாது
என்னுடைய தளத்தில் உள்ளது எப்படி நான் எழுதி உள்ளேன் என்பதை பார்த்து
உங்கள் எழுத்து நடையில் உங்கள் தளத்தில் வெளியீடு செய்யலாம்
அதில் தவறு ஒன்றும் இல்லை (எழுத்தை கோப்பி அடிக்க கூடாது
என்னுடைய பதிவில் டவுன்லோட் செய்யும் லிங்க் மட்டும் எடுத்து
வெளியீடு செய்வதில் ஓரு தவறும் இல்லை என்னுடைய தளம் மட்டும் அல்ல
உங்களுக்கு புடித்த எந்த (தொழில் நுட்பம் )பதிவாக இருந்தாலும் உங்கள்
எழுத்து நடையில் வெளியீடு செய்வதில் தவறு இல்லை
கோப்பி பேஸ்ட் கவிதை மற்றும் கட்டுரை இதில் அடங்காது
நன்றி
வாழ்க பாரதம்
பழைய ப்ளாக் முதலாளிகளுக்கு
நீங்க தான் சொல்ல வேண்டும் ஓரு நாளைக்கு 100 பேஜ் முதல் 150 வரை
தான் பார்க்கபடுகிறது என் தளம் இது குறைவா அல்லது நிறைவா
என்னோட இந்த ப்ளாக் ஆரம்பம் செய்து இன்றுடன் 66 நாட்கள் ஆகிறது
அலெக்ஸா ரேங்க் என் தளம் இது குறைவா அல்லது நிறைவா
கூகிள் Analytics என் தளம் இது குறைவா அல்லது நிறைவா
என்னோட இந்த ப்ளாக் ஆரம்பம் செய்து இன்றுடன் 66 நாட்கள் ஆகிறது
இந்த பதிவு எழுதும் முன் என்னால் இந்த பதிவு எழுத முடியும் என்று எனக்கு
நம்பிக்கை இல்லை ஆனால் பதிவு முதல் வரி மட்டும் தான் எழுத கஷ்ட
பட்டேன் பிறகு தானாகவே எழுத முடிந்தது
எல்லா புகழும் இறைவனுக்கே
நண்பா வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பதிவிடுங்கள்
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteஉங்கள் ப்ளாக்-ஐ திறக்கையில் இரண்டு Pop UP விண்டோ வருகிறது .Widgeo -வால் தான் வருகிறது என நினைக்கிறேன் ..
ReplyDeleteநன்றி
பிழையை சரி செய்ய முயற்சி செய்கிறேன் நன்றி நண்பா
Deleteநண்பா பதிவு கலக்கல்.......
ReplyDeleteஅப்புறம் நீங்க பதிவு எழுத ஆரம்பிச்சே இரண்டு மாதம் தான் ஆகியிருக்கு அதுக்குள்ள ஏன் அவசரப் படுரீங்க நீங்க இப்பொது பெற்றிருக்கும் அனைத்தும் சாதனை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது...
இன்னும் பல திரட்டிகளில் பகிருங்கள்
இன்னும் பல திரட்டிகளில் பகிருங்கள்/////////////////////////
Deleteமுயற்சி செய்கிறேன் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
எழுத்து பிழையோ, எதுவோ... (சில விசயங்களில்) தவறு செய்ய செய்ய, நிறைய தெரிந்து கொள்ள முடியும்... ஆர்வம் மட்டும் குறையாமல் இருந்தால் சரி...
ReplyDelete66 நாட்களில் 50 பதிவுகள்... வாழ்த்துக்கள்...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சார்
Deleteஐம்பதுக்கு வாழ்த்துக்கள்... என்று சொல்ல மாட்டேன். :D :D :D
ReplyDeleteஅட! முதல் பதிவு என் பதிவா? தெரியவே இல்லை. என் முதல் ப்ளாக் கூட காப்பி பேஸ்ட் ப்ளாக் தான் (ஆங்கிலத்தில்).
நீங்கள் கேட்டுக் கொண்டதற்காக சிலவற்றை சொல்கிறேன். இவைகள் குறைகள் அல்ல, ஆனால் மாற்றினால் நன்றாக இருக்கும். இது என் கருத்து மட்டுமே.
1. பதிவுகள் Center Align-ல் உள்ளது. அதை Left Align-கு மாற்றினால் நலம்.
2. தொழில்நுட்ப பதிவுகள் என்பது மற்ற பதிவுகளை விட தனித்தது. நகைச்சுவை கலக்கலாம், ஆனால் முழுவதும் நகைச்சுவையாக எழுதினால் படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படலாம்.
இப்போதைக்கு இவ்வளவு தான்.
பிறகு Pageviews, Ranking பற்றி இப்போது கவலைப்படாதீர்கள். அது தானாக உயரும். புதிய செய்திகளை பகிர்ந்தால் வாசகர்கள் எண்ணிக்கை கூடலாம்.
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா! :D :D :D
1. பதிவுகள் Center Align-ல் உள்ளது. அதை Left Align-கு மாற்றினால் நலம்.
Delete2. தொழில்நுட்ப பதிவுகள் என்பது மற்ற பதிவுகளை விட தனித்தது. நகைச்சுவை கலக்கலாம், ஆனால் முழுவதும் நகைச்சுவையாக எழுதினால் படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படலாம்.
இப்போதைக்கு இவ்வளவு தான்.//////////////////////////////////////
முழுவதும் நகைச்சுவையாக எழுதினால் படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படலாம்.
புரிகிறது நண்பா மொக்கை கொஞ்சம் குறைத்து கொள்கிறேன்
Center Align முயற்சி செய்கிறேன் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
எத்தனை பதிவு எழுதியிருக்கிங்க என்பது முக்கியமில்லை அது பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுமா என்பதை தான் கவணிக்க வேண்டும், உங்கள் பதிவை பார்த்து நிறைய சொல்ல நினைத்தேன், குறைகளையும் சொல்ல நினைத்தேன் ஆனால் பின்னொரு நாளில் நேரம் கிடைத்தால் சுட்டிக்காட்டுகிறேன்.
ReplyDeleteகுறைகளையும் சொல்ல நினைத்தேன் ஆனால் பின்னொரு நாளில் நேரம் கிடைத்தால் சுட்டிக்காட்டுகிறேன்.
Delete////////////////////
நிறைகளை மறைத்தாலும் பரவாயில்லை குறைகளை சொல்லுங்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் மேலதானியம் ஆசாத் நீங்கள் செய்த முயற்சி வீண் போகாது மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் நன்றி நண்பா
Deleteநன்றி நண்பா,,எனக்கு நன்றாக புறிந்தது ... நானும் முயர்சிகீரன் ...
ReplyDelete