Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 4, 2012

கூகிள் தேடலில் உங்கள் வலைப்பூ சேர்ப்பது எப்படி

தேடுபொறியில் முதலிடத்தில் உள்ளது கூகிள் தளம் ,இது அனைவரும் 

அறிந்தததே நமது வலைப்பூவை கூகிள் சேர்த்தல் நமது தளத்திற்கும் 

வாசகர்கள் வரவு அதிகமாக இருக்கும் நமது தளத்தில் பதிவு எழுதினால் 

மட்டும் போதாது அந்த பதிவை பிரசுரிக்க தேடுபொறியில்  இணைப்பது 

அவசியம் உதாரணமாக நாம் ஓரு புதிதாக ஓரு கடை திறக்கிறோம்

அப்பொழுது நமது கடையை விளம்பரம் செய்ய பேப்பர் டிவி யில் விளம்பரம் 

செய்து நமது கடையை அனைவர்களுக்கும் தெரிய படுத்துவோம் அல்லவா 

அதே போல தான் இணையத்திலும்  பதிவை அனைவர்களுக்கும் தெரியபடுத்த

தேடுபொறியில் சேர்க்க வேண்டும் தேடுபொறியில் முன்னிடத்தில் உள்ளது

கூகிள் ,யாஹூ ,பிங்,போன்ற நிறைய தேடுதல் தளங்கள் உள்ளது 

முதலில் கூகுளில் எப்படி இணைப்பது என்று பார்போம் 

குறிப்பு :உங்கள் ப்ளாக் அல்லது வேறு தளங்கள் எத்தனை வேண்டும் 

என்றாலும்  கூகிள் வெப் மாஸ்டரில் சேர்க்க முடியும் ஆனால் நீங்கள் தான் 

அந்த  தளத்தின் நிர்வாகி என்று உறுதி செய்ய வேண்டும்

சரி வாங்க பாஸு பதிவுக்கு போகலாம் 

முதலில் https://www.google.com/webmasters/tools/  இந்த தளத்திற்கு செல்லவும் பிறகு 

உங்கள் தளத்தின் url முகவரி குடுத்து  Add a Site குடுக்கவும்  

 உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 




பிறகு அடுத்த பக்கம் வரும் அதில் மெசேஜ் வந்து இருக்கும் அதில் 

verify செய்யவும் (verify  செய்வது கடினமான வேலை கிடையாது  verify லிங்க் மீது 

கிளிக் செய்தால் போதும் verify செய்து கொள்ளலாம் 



உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை போல் இருக்கும் 

உங்களுடைய ஜிமெயில் கணக்கு முலமாக வெப் மாஸ்டர் தளம் 

சென்று இருந்தால் தானாகவே verify செய்து கொள்ளும் கூகிள்

verify தானாகவே ஆகவில்லை என்றால் verify  செய்து கொள்ளவும் 

verify  எப்படி செய்யது என்று அடிக்குறிப்பில் சொல்லி உள்ளேன் பார்க்கவும் 




புதிய ப்ளாக் நீங்கள் ஆரம்பம் செய்தலும் தானாகவே கூகிள் வெப் மாஸ்டர் 

டூல் உங்கள் தளத்தை சேர்த்து கொள்ளும் பழைய ப்ளாக் அல்லது பழைய 

தளங்களை இணைக்க வேண்டும் என்றால் மட்டுமே நீங்கள் தான் அந்த 

தளத்தின்  நிர்வாகி என்று verify செய்ய வேண்டி வரும்

நிர்வாகி என்று verify  செய்வது ஒன்றும் கடினமான வேலை கிடையாது

verify  செய்வது எப்படி என்று வாங்க பார்க்கலாம் முதலில் verify  லிங்க் மீது 

செய்யவும் அடுத்து html கிளிக் செய்து விட்டு verify என்பதை கிளிக் செய்யவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


பிறகு கிழே உள்ள  கோடிங் கோப்பி எடுக்கவும் பிறகு உங்களுடைய ப்ளாக்

டஷ்போர்ட்  பகுதிக்கு செல்லவும் அடுத்து டெம்ப்ளேட் எடிட் html திறக்கும் 

பிறகு <head> ctrl +f குடுத்து தேடவும் பிறகு 

அதன் கிழே  கோப்பி எடுத்த கோடிங் போஸ்ட் செய்து சேமிக்கவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 



நீங்கள் verify  சரியாய் சேர்த்து இருந்தால் கிழே உள்ள படத்தை போல் வரும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 


புதிதாக இணைக்க பட்ட டூல் உடனடியாக இயங்காது சில நாட்கள் எடுக்கும்

அதுவரை காத்திருக்க வேண்டும் அல்லது முன்பே உங்கள் தளத்தில்

கூகிள் அனலிடிக்ஸ்  https://www.google.com/analytics/

நிறுவி இருந்தால் உடனே காட்டும் உங்கள் தளத்தின் தகவல்  அனைத்தும்

  நன்றி அடுத்த பதிவில் சந்திப்போம்


                                                                              வாழ்க பாரதம்


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பலருக்கும் பயன்படும் தகவல் நன்றி பகிர்தமைக்கு

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்