Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 3, 2012

ப்ளாக் நிர்வாகி மற்றும் ஆசிரியர் சேர்ப்பது எப்படி பாடம் -10


UPDATE :

மன்னிக்கவும் இந்த வலைப்பூ வில் உள்ள அனைத்து புகைப்படங்களும் 

தவறுதலாக டெலிட் ஆகி விட்டது ஆகவே சந்தேகம் இருந்தால் கருத்து 

பெட்டியில் கேட்கவும் 


இன்று நாம் பார்க்க போற பதிவு மிகவும் முக்கியமானது எதற்கு

முக்கியமானது என்று சொல்லுகிறேன் தெரியுமா நண்பர்களே

கோவம் படாதிங்க நானே சொல்லுகிறேன் உதாரணத்துக்கு நமது ப்ளாக்யை

நாம் ஜிமெயில் முலமாக தான்  உபயோகம் செய்து கொண்டு இருக்கிறோம்

ஓரு வேலை உங்கள் ஜிமெயில் கணக்கு முடக்கப்பட்டலோ அல்லது 

ஜிமெயில் கடவுச்சொல் மறந்து  விட்டாலோ (கடவுச்சொல் ஈசியாக எடுத்து 

விடலாம்  ஆனால் security qus அல்லது recovery email  address குடுக்க வேண்டும்

அப்படி செய்ய வில்லை என்றால் உங்கள் கணக்கை மீட்டு எடுக்க முடியாது )

பிறகு ஜிமெயில் திறக்க முடியவில்லை என்றால்  உங்கள் ப்ளாக்கையும் 

திறக்க முடியாது பிறகு நாம் கஷ்டப்பட்டு உருவாகிய தளத்தை இழக்க

நேரிடலாம் ஆகையால் நமது தளத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட 

நிர்வாகிகளை அமைப்பது தான் சிறந்தது  நிர்வாகி சேர்ப்பதில் முன் பின் 

தெரியாத நபர்களை சேர்க்க வேண்டாம் பிறகு அவர்கள் உங்களை நீக்கி  

விட்டு அவர்கள் உங்களை ப்ளாக்யை அவர்கள் உபயோகம் செய்து

கொள்வார்கள் உங்கள் பெயரில் புதிதாக ஓரு ஜிமெயில் கணக்கு தொடங்கி

நிர்வாகி  சேர்த்து கொள்ளவும் ஆசிரியர் யாரை வேண்டும் என்றாலும் சேர்த்து

கொள்ளலாம் அதில் ஓரு பிரச்னையும் வராது சரி வாங்க பதிவுக்கு போகலாம் 

முதலில் ஆசிரியர் எப்படி சேர்ப்பது என்று பார்போம் 

உங்கள் ப்ளாக்யின் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து அதில் 

அமைப்புகளும் கிளிக் செய்யவும் பிறகு அமைப்புகளும் கிழே முதலில் உள்ள 

அடிப்படை என்பதை தேர்வு செய்யவும் பிறகு ஆசிரியர்களை சேர் என்பதை 

கிளிக் செய்தால் ஓரு பெட்டி வரும் அதில் நீங்கள் யாரை ஆசிரியர் சேர்க்க 

விருப்பம் உள்ளதோ அவர்கள் மின்ஞ்சல் முகவரி குடுத்து கிழே உள்ள

ஆசிரியரை அழைக்கவும் என்பதை கிளிக் செய்தால் அவர்களுக்கு ஈமெயில்

அனுப்படும் ஈமெயில் உறுதி செய்தால் அவர்கள் உங்கள் தளத்தின் 

ஆசிரியராக சேர்க்கப்படுவர்  உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்

குறிப்பு :ஜிமெயில் புதிய முகவரி தான் குடுக்க வேண்டும் உதாரணமாக

கிழே உள்ள படத்தை பாருங்க கிழே asa asath என்று நிர்வாகி உள்ளது

நான் வேற ஓரு ஈமெயில் முகவரி குடுத்து உள்ளேன் அதே போல தான்

வேறு ஓரு ஈமெயில் முகவரி குடுத்து புதிய ஆசிரியரை சேர்க்க வேண்டும்

(இரண்டுமே என்னுடைய ஜிமெயில் கணக்கு தான் )|




அடுத்து நீங்கள் அனுப்புதல் செய்த  ஈமெயில் முகவரிக்கு சென்று ஆசிரியர்

சேர அனுமதி குடுங்கள் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்













அடுத்து அனுப்புதல் செய்த மெயில் சென்று பார்க்கவும் அதில் நீங்கள்

ஆசிரியர் சேர லிங்க் வந்து இருக்கும் அதில் கிளிக் செய்யவும்

அடுத்து உங்கள் தளத்திற்கு சென்று பார்க்கவும் ஆசிரியர் சேர்க்க

பட்டு இருக்கும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



சரி ஆசிரியர் சேர்ப்பது எப்படி என்று பார்த்தாச்சு அடுத்து நிர்வாகி எப்படி

சேர்ப்பது என்று பார்போம் நிர்வாகி சேர்ப்பது ஆசிரியர் சேர்க்கும் அதே

வழிமுறை தான் ஆசிரியர் சேர்த்த உடன் ஆசிரியர் என்பதில் கிளிக் செய்து

மாற்றி கொள்ளவும் நிர்வாகி என்று அவ்வளவு தான்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



என்னுடைய பதிவை முழுவதும் படித்தமைக்கு நன்றி


குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

2 comments:

  1. விளக்கமான பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  2. என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
    நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
    நன்றி

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்